கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்!

 
கால்நடைகளுக்கு  தடுப்பூசி முகாம்!


தமிழகத்தில் ஆண்டு தோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடை வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ்க் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து இலவசமாக மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.


கொரோனா காரணமாக கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனைகளின் குளிர்பதன அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்து கையிருப்புக்கள் மூலம் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறு சதவிகிதம் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது முழுமையாக நிறைவடைந்ததா அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளுக்கு  தடுப்பூசி முகாம்!


மேலும், கேரளா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களான தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை மாவட்டங்களிலும் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு மூலம் பெறப்பட்ட மருந்துகளில் சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்து பெற்று வழங்க தமிழக அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு  தடுப்பூசி முகாம்!


கால்நடை விவசாயிகள் கால்நடைகள், அதன் கொட்டகைகளையும் சுகாதார முறையில் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். கால்நடைகளுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

From around the web