பெண் அதிகாரியிடம் கத்தியை காட்டி கைவரிசை.. 8.5 சவரன் தங்க நகைகளை ஆட்டைய போட்ட இருவர் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் கிழக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிவராயர் தோட்டத்தில் பட்டு நூல்கார தெருவில் தஞ்சாவூர் தொடக்க பட்டு கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் பிரகதீஸ்வரி (62) என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க நகைகளை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
உடனடியாக அவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரா பெயரில், காவல் உதவி ஆய்வாளர் தெனாரரா தலைமையில், தனிப்படை அமைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த பாலசந்தர் (35), செந்தில்குமார் (46) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பியோட முயன்ற பாலசந்தரின் கால் மற்றும் செந்தில்குமாரின் கை முறிந்தது. இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 8 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!