'சபரிமலை சீசன் வருது’ தமிழர்கள் வரணும் ஞாபகம் வெச்சுக்கோங்க... தமிழக அரசுக்கு கேரள அமைச்சர் எச்சரிக்கை!
இது குறித்து கேரள சட்டசபையில் பேசிய அமைச்சர், கேரளாவுடன் கலந்தாலோசிக்காமல் தமிழகம் ரூ.4000வரியை உயர்த்தி உள்ளது. கேரளாவில் சபரிமலை சீசன் வருவதை தமிழகம் நினைவில் கொள்ள வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அங்கு ரூ.4000 வாங்கினால் நாங்களும் இங்கு ரூ.4000 வாங்குவோம். எங்களுக்கு தீங்கு செய்தால் உங்களுக்கும் பதிலுக்கு தீங்கு விளைவிப்போம்" என்று அமைச்சர் கணேஷ் குமார் கூறினார்.
முன்னதாக தமிழகத்திற்கு சுற்றுலா வரும் வெளிமாநில வாகனங்களுக்கு காலாண்டு வரியாக ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் இந்த வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக கேரள அமைச்சர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!