சபரிமலையில் புதிய நடைமுறைகள் ! தேவசம் போர்டு அதிரடி!

 
சபரிமலையில்  புதிய நடைமுறைகள் ! தேவசம் போர்டு அதிரடி!


கார்த்திகை மாதம் விரைவில் தொடங்க உள்ளது. சபரிமலை பக்தர்களுக்கு கார்த்திகை மாதம் உகந்த மாதம். நடப்பாண்டில் கார்த்திகை மாத கொண்டாட்டங்கள் குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

சபரிமலையில்  புதிய நடைமுறைகள் ! தேவசம் போர்டு அதிரடி!

இந்த கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் நடந்தது.
கொரோனா காரணமாக சபரிமலையில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. நடப்பாண்டில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கார்த்திகை மாத சீசனில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சபரிமலையில்  புதிய நடைமுறைகள் ! தேவசம் போர்டு அதிரடி!


சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நேரடியாகவே நெய்யை சன்னிதானத்தில் அபிஷேகத்துக்கு வழங்கும் முறை அமல்படுத்தப்படும். மேலும் தங்குமிடம் வசதி, உணவு, போக்குவரத்துக்களும் மேம்படுத்தப்படும். பம்பை வரை போக்குவரத்தை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

From around the web