சுவாமிமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது... டிச.13ல் தேரோட்டம்!

 
சுவாமிமலை முருகன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். 60 தமிழ் வருட தேவதைகள், 60 தட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

சுவாமி மலை முருகன்

இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வள்ளி - தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், திரவிய பொடி, சந்தனம், உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.

சுவாமி மலை முருகன்

சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 9ம் நாளான திருக்கார்த்திகை அன்று 13ம் தேதி வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபக் காட்சியும் நடைபெறுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web