கமல் - வினோத் இணையும் KH233... லேட்டஸ்ட் அப்டேட்...!

 
kamal

கமல்ஹாசன் நடிப்பில் எச்.வினோத் இயக்கும் படம் தாமதமாகி வந்த நிலையில்  அந்த படம்  கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வரவிருக்கும் படங்கள் அந்த நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 'தக் லைப்' கமல்ஹாசனின் 237வது படம், சிவகார்த்திகேயனின் 21வது படம், சிம்புவின் 48வது படம் என நான்கு படங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் 237வது படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பரிவ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


 

எனவே ராஜ்கமல் இன்டர்நேஷனல் பட்டியலில் எச்.வினோத்தின் படம் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லாததால், படம் எடுக்கவில்லை என ராஜ்கமல் இண்டர்நேஷனல் மறைமுகமாக தெரிவித்தாக கூறப்பட்டது. ஒருவேளை எச்.வினோத் பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கலாம், ஆனால் இப்போது அப்படி ஒரு படம் இல்லை என்றும் தகவல் வெளியானது. 

கமல் - எச் வினோத் படத்தில் இந்த இரண்டு பிரபலங்களா? பரபரப்பு தகவல்..! -  தமிழ் News - IndiaGlitz.com

இந்த நிலையில், படம் கைவிடப்படவில்லை என்றும், படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதுக்குறித்து டிவிட்டரில் சினிமா செய்திகளை வெளியிடும் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,  உலகநாயகன் கமல்ஹாசன் -  எச். வினோத் படத் திட்டம் (KH233) இன்னும் நடக்கிறது..  கைவிடப்படவில்லை என்றும்  ராஜ்கமல் ப்லிம் இன்டர்நேஷனல் விரைவில் தகவல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web