புதிய பாம்பன் பாலம் நவம்பர் 20ல் மோடி திறந்து வைப்பு!

 
கலாம் சேது பாலம்

 ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள  பாம்பன் பாலம் அருகே கடலில் ரூ.550 கோடியில் புதிதாக இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது.  இந்த புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகத் தெரிகிறது.  பாலத்திற்கான பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் முடிந்து உள்ளன.

கலாம் சேது பாலம்

இந்நிலையில், பிரதமர் மோடி நவம்பர் 20ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க திட்டமிட்டு இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களும் மீண்டும் பாம்பன் புதிய ரயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளனர்.

பாம்பன் பாலம்


இந்த ஆய்வில் இந்திய ரயில்வேயின் அனைத்து பிரிவு முதன்மை அதிகாரிகள் மற்றும் ஆர்விஎன்எல் முதன்மை பொறியாளர்கள் குழுவினர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.  சிஆர்எஸ் ஆய்வுக்கு பின் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்படும் என ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே.அப்துல் கலாமின் பெயரை பாலத்துக்குச் சூட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்  இந்த பாலத்திற்கு ‘கலாம் சேது’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web