JUSTICE 4 MOUMITA | ‘எங்களுக்கு பணம் வேண்டாம்... நீதி தான் தேவை’ அரசின் நிவாரண தொகையை ஏற்க மாணவியின் தந்தை மறுப்பு!

 
கொல்கத்தா மருத்துவர்

எங்களுக்கு நீதி தான் வேண்டும்.. பணம் வேண்டாம் என்று கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவியின் தந்தை உருக்கமாக பேசி அரசின் நிவாரண பணத்தை மறுத்திருக்கிறார் .

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு வழங்கிய நிவாரணத் தொகையை ஏற்க பயிற்சி பெண் மருத்துவரின் தந்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியிருக்கும் அவர், “இந்த பணத்தை நான் ஏற்றுக் கொண்டால் அது இறந்து போன என் மகளை காயப்படுத்தும். எங்களுக்கு தேவை நீதி தானே தவிர பணம் அல்ல” என்று உருக்கமாக பேசியிருக்கிறார். 

பயிற்சி மருத்துவர்

முன்னதாக கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட வழக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொல்கத்தாவில் மருத்துவர்களும், மாணவர்களும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

இந்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், திடீர் திருப்பமாக பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மருத்துவரின் உடலில் 150 மிகி உயிரணுக்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் கூறப்பட்டுள்ளது வழக்கின் விசாரணையை மேலும் பதற்றத்திற்குள்ளாக்கி இருக்கிறது. 

கொல்கத்தா

ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உடன் இருந்தவர்களை ஏன் போலீசார் இதுவரை கைது செய்யவில்லை? வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்கிறதா? போலீசார் ஏன் கொலை வழக்காக பதிவு செய்யாமல், மர்ம மரணம் என்று பதிவு செய்திருக்கிறார்கள்? என்று பல கேள்விகளை முன் வைத்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web