குருவும் , சுக்கிரனும் இணைவதால் ராஜயோகம் பெறப் போகும் ராசிகள்!
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் சுக்கிரன் இணைந்துள்ளார். ஏப்ரல் 24ம் தேதி சுக்கிரன் மற்றும் குரு இருவரும் இணைவதால் ஒரு சில ராசிகளும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.
மேஷம்
12 ஆண்டுகளுக்கு பிறகு குருவும் சுக்கிரனும் இணைவதால் சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகிறது. தொழில் மற்றும் உடல் ஆரோக்கியம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி அன்னியோன்யம் அதிகரிக்கும்.வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.
ரிஷப ராசி
குருவும், சுக்கிரனும் இணைவதால் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறார். பணம் பலவழிகளில் வந்து சேரும். எதிர்பாராத நேரத்தில் லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடக ராசி
குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேரும் போது கோடி நன்மைகள் கிடைக்கப்போகிறது.வாழ்க்கையில் வசதிகள் மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான நெருக்கம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு திடீர் அதிர்ஷ்டம் தேடிவரும். நண்பர்களால் ஆதரவு கிட்டும். குடும்பத்தின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் ராசி
குருவும், சுக்கிரனும் இணைவதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!