ரூ37000 சம்பளம்.. .தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!

 
என்ஐடி

திருச்சியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17
மொத்த பணியிடங்கள்: 7
மாதச்சம்பளம் : ரூ37000 வரை
 வயது வரம்பு :40க்குள் 

வேலை வாய்ப்பு
கல்வித்தகுதி  : கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பிஇ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.  எம்சிஏ படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 
முன் அனுபவம்: குறைந்தது 4  ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு  தேதி , நேரம் ஆகிய தகவல்கள்  மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

என்ஐடி
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின்போது தங்களுடைய அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.   
கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு   www.nitt.edu என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம். இந்த இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web