அரசியல் விமர்சகர்.. யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ஜாமீன்!

 
சவுக்கு சங்கர்

கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (43). கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய ரூ.7 லட்சம் அளித்திருந்தார். 2, 3 மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாகக் கூறியவர் அதன் பிறகு தொடர்புக் கொண்டப்போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
விக்னேஷ் கடந்த ஜூன் 5ம் தேதி கரூர் வந்த போது கிருஷ்ணன் அவரை சந்தித்து பணத்தை கேட்ட போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் கடந்த ஜூன் 5 வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில் சவுக்கு சங்கர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

சவுக்கு சங்கர்
இவ்வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் நீதிபதி பரத்குமார் முன் சவுக்கு சங்கரை கரூர் நகர போலீசார் ஜூலை 9ம் தேதி ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் விசாரிக்க 7 நாட்கள் கேட்ட நிலையில் நீதிபதி 4 நாட்கள் வழங்கினார். 4 நாட்கள் முடிந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் கரூர் நகர போலீஸார் ஜூலை 13ம் தேதி ஆஜர்படுத்தினர். இதைய டுத்து சவுக்கு சங்கருக்கான நீதிமன்ற காவலை ஜூலை 23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத் தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் இவ்வழக்கில் இன்று (ஜூலை 24ம் தேதி) சவுக்கு சங்கருக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற 1 நீதிபதி பரத்குமார் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web