அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான்... அமித்ஷா பளீச்!

 
அமித்ஷா

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பினார்.இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார். 

அமித்ஷா

அவருடன் பாஜக எம்.எல்.ஏ.நயினார் நகேந்திரனும் உடன் சென்றிருந்தார். தமிழக அரசியல் களம் பற்றி அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஒரு காலத்தில் முன்னேறிய மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது திமுக ஆட்சியில் சீரழிந்து வருகிறது. 

அமித்ஷா

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web