ஆரம்பமே அதகளம்... ‘தக் லைஃப்’ மணிரத்னத்துடன் கம்பீரமாக களமிறங்கும் கமல்!

 
கமல்

நாளை நடிகர் கமல்ஹாசனின் 68து பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்றிலிருந்தே துவங்கி விட்டது. ‘விக்ரம்2’  படத்திற்கு பின், அடுத்தடுத்து வரிசையாக படங்களை கமிட் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதே சமயம் அரசியல் நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்து கமிட் செய்கிறார். இன்னொரு புறம் பிக் பாஸ் பணிகள். தன்னால் செய்ய முடியாத படங்களை, அடுத்த தலைமுறை நடிகர்கள், இயக்குநர்களை வைத்து தயாரிப்பு பணிகளையும் மீண்டும் துவங்கியிருக்கிறார். 

இந்நிலையில், கமல் - மணிரத்னம் இணையும் புதிய படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'தக் லைஃப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த புதிய படத்தின் டைட்டில் டிசைன் வைரலாகி வருகிறது. கமலின் தோற்றமும் மிரட்டலாக இருக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள். நேற்று ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் அப்டேட்டை காலையில் இருந்தே படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

‘தூங்காவனம்’, ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைகிறார். நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவியும் படத்தில் இருப்பதை தெரிவித்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் முகம் முழுவதும் மூடியபடி கண்கள் மட்டும் தெரிய பின்னால் புழுதி பறக்கும் இந்த போஸ்டர் வெளியானதில் இருந்தே கவனம் பெற்றது. தற்போது தலைப்பும் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web