“தாய்மொழியில் ஐபிஎல் வர்ணனை கேட்பதே சுகம்” தோனி நெகிழ்ச்சி!

'என்ன தான் இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வர்ணனையை, அவரவர் தாய் மொழியில் கேட்பதே தனி சுகம். எனக்கு என்னுடைய தாய்மொழியான போஜ்புரியில் கிரிக்கெட் வர்ணனை கேட்பது பிடிக்கும்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி வீரர் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சிகள், ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்கின்றன. ஆட்டத்தை வர்ணனை செய்ய அந்தந்த மொழி தெரிந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முதல் முறையாக பீகாரில் பேசப்படும் போஜ்புரி மொழியிலும் கிரிக்கெட் வர்ணனையுடன் ஐபிஎல் ஆட்டங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இது குறித்து சென்னை அணியின் முன்னணி வீரர் எம்.எஸ்.தோனி கூறுகையில், 'நான் கேட்கும் கிரிக்கெட் வர்ணனைகள் பெரும்பாலும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு பீகாரில் பேசப்படும் போஜ்புரி மொழியில் வர்ணனை கேட்பது மிகவும் துடிப்பான உணர்வை தரும். இது, பழைய பள்ளி காலத்தில் வானொலியில் கேட்ட வர்ணனையை நினைவுபடுத்துகிறது. அது, எனக்கு எப்போதும் சுகமான அனுபவம். பலரும் தங்கள் தாய்மொழியில்தான் வர்ணனைகளை கேட்க விரும்புகின்றனர். அப்போதுதான் விளையாட்டை முழுமையாக அனுபவிக்க முடியும். அதே சமயம், ஹரியான்வி மொழி வர்ணனை தனித்துவம் வாய்ந்தது' என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!