இன்றோடு 24 வருஷமாச்சு... தனி மனுஷியாய் சுழன்றடிக்கும் பிரேமலதா விஜயகாந்த்... வேகமெடுக்கும் தேமுதிக!

 
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக துவங்கப்பட்டு இன்றோடு 24 வருடங்கள் கடந்தோடி விட்டது. தனி மனுஷியாய் கேப்டனின் கனவை நிறைவேற்றும் முனைப்புடன் தேமுதிகவை கையிலெடுத்திருக்கிறார் பிரேமலதா. விரைவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுழன்றடித்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேமுதிகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை  விரைந்து முடிக்க வேண்டும் நிர்வாகிகளுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயகாந்த், பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை- Dinamani

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,, "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அன்புச் சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 24வது வருட நாள் இன்று பிப்ரவரி 12-ம் தேதி கொண்டாட உள்ளது. நம் தலைவர் கேப்டன் இல்லாத முதல் கொடி நாள். கேப்டன் மறைவு ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

கேப்டன் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி மூவர்ணக் கொடியை 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கிய பிறகு அதை கழக கொடியாக மாற்றி அந்த கொடி தினத்தை ஆண்டு விழாவாக கொண்டாடினோம். தமிழகம் முழுவதும் திருவிழா. தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மூவர்ணக் கொடியின் வண்ணங்கள் மூலம் நமது சங்கத்தின் கொள்கைகளை பொறிக்கிறோம். சமத்துவம், சமூக நீதி, சம்சிந்தனை ஆகியவற்றைப் பறைசாற்றும் கொடியாக நமக்குத் தந்தார்.

சாதி, மதம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, மலிவு மருத்துவம்,   வளமான தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை நமது பிரததி தீபத்தின் மூலம் அளித்து, அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பான குடிநீர், கொடி அறிமுகப்படுத்தப்பட்ட அன்றே,  படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழலற்ற நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி என எண்ணற்ற புரட்சிகரமான கொள்கைகளை அவர் நமக்கு உறுதியளித்தார்.

இந்நிலையில் வரும் கொடி நாளன்று அனைத்து மாவட்டம், பகுதி, நகர ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி கிளைகள், பகுதிகளில் உள்ள அனைத்து கிராம கிளைகளிலும் உள்ள பழைய கொடிகளை அகற்றி, புதிய கொடிகளை ஏற்றி, கழக கொடி இல்லாத இடங்களில் புதிய கொடிகளை ஏற்றி, அந்த இடத்தில் கேப்டனின் புகைப்படத்தை வைக்க வேண்டும். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். 

நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தியதால் தேமுதிகவுக்கு சறுக்கல்” -  பிரேமலதா விவரிப்பு | Premalatha Vijayakanth press meet in chennai -  hindutamil.in

கேப்டன்  கொள்கைப்படி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கையை அசுர வேகத்தில் நடத்தி, நமது கொடிநாளில் அதிக உறுப்பினர்களுக்கான முகாம்களை நடத்தி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.   அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக நம்முடைய கழகத்தை வளர்க்க வேண்டும்.

இந்நாளில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் உறுதிமொழி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!! நன்றி! வணக்கம். என குறிப்பிட்டிருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web