24 மணி நேரம் தான்.. எலான் மஸ்க்கிற்கு கெடு விடுத்த நீதிமன்றம்!

 
எலான் மஸ்க்

பிரேசிலில் உள்ள எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான காலக்கெடுவை பிரேசில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.ட்விட்டர் என உலகளவில் பிரபலமாக இருந்த தளத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, அதன் பெயரை X என மாற்றினார். அதன் பின்னர், எலான் மஸ்க் புளூடிக் கட்டணம் செலுத்துதல், பணியாளர்களை பணிநீக்கம் செய்தல் உள்ளிட்ட பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

எலான் மஸ்க்

பிரேசில் சமீபத்தில் X தள செயல்பாடுகளில் தணிக்கை உத்தரவுகளை விதித்தது. இதனால், சில வாரங்களுக்கு முன் எக்ஸ் தளத்தின் பிரேசில் அலுவலகத்தை மொத்தமாக மூடிய எலான் மஸ்க், ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிரேசிலில் உள்ள எக்ஸ் தளம் வழக்கம் போல் செயல்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்நிலையில், எக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்த பிரேசில் உச்ச நீதிமன்றம், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரேசிலுக்கான எக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியை எக்ஸ் நிறுவனம் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் உள்ள எக்ஸ் தளம் முழுமையாக முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web