ஜூன் வரை வெயில் அதிகமாக இருக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை... பத்திரம் மக்களே!

 
வெயில்

இன்று ஏப்ரல் மாதம் துவங்கி உள்ள நிலையில், இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெயில் காலங்களில் கூடுமானவரை அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்திடுங்க. பருத்தியினால் ஆன ஆடைகளை அணியுங்க. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களை தனியே எங்கும் அனுப்பாதீங்க. தேவையான அளவு தண்ணீர் அருந்துங்க. நீர் சத்து அதிகமுள்ள காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கோங்க. கூடுமானவரை அசைவ உணவு வகைகளைத் தவிர்த்திடுங்க. 

நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான அதிகபட்ச வெப்ப நிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். இதைப்போல பெரும்பாலான பிராந்தியங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட அதிகமாக இருக்கும். அதேநேரம் மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை இருக்கும்.

வெயில்

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் வடமேற்கு சமவெளிப்பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 4 நாட்கள் வரை கூடுதலான வெப்ப அலை நாட்கள் இருக்கும். ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியாவில வழக்கமாக 4 முதல் 7 வெப்ப அலை நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அதிக நாட்களை எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான், குஜராத், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மராட்டியம், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, சத்தீஷ்கார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் வட பகுதிகளும் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களை கொண்டிருக்கும்.

வெயில் பெண்கள்

இந்த காலகட்டத்தில் கிழக்கு உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், ஒடிசா போன்ற மாநிலங்களில் 10 முதல் 11 வரை வெப்ப அலை நாட்கள் இருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதம் வழக்கமான அதிகபட்ச வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை காணப்படும். எனினும் தெற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் சாதாரண வெப்பநிலை இருக்கலாம்.

வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த ஒருசில இடங்களை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web