அதிர்ச்சி... ஐடி ஊழியர் கழிவறையில் மாரடைப்பால் மரணம்!
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது திடீர் மரணங்கள், மாரடைப்பு உயிர்ப்பலிகள் அதிகரித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் HCL டெக் நிறுவனத்தில் வேலை செய்து வந்த 40 வயதான நிதின் எட்வின் மைக்கேல், அலுவலகத்தின் கழிப்பறையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த ஆய்வாளராக பணியாற்றிய எட்வின் கழிவிடத்திற்கு சென்று நீண்ட நேரமாகியும் தனது பணியிடத்திற்கு திரும்பவில்லை. இதனால் சக பணியாளர்கள் சந்தேகத்தின் பேரில் அவரை காணப்போக, அவர் கழிப்பறையில் கீழே வீழ்ந்தபடி இருந்ததை கண்டனர்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அவரது சக பணியாளர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மைக்கேலுக்கு திருமணம் ஆகிய நிலையில் மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். போலீசார் நிதின் எட்வினின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!