ஹிஸ்புல்லாவை குறிவைத்த இஸ்ரேல்.. லெபனான் மீது பயங்கர தாக்குதல்.. பதற்றத்தில் மக்கள்!
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை ஒழிக்க போராடி வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு பெரும் தலைவலியாக உள்ளது. ஹமாசுக்கு ஆதரவாக இந்த அமைப்புகள் இஸ்ரேலை தினமும் தாக்கி வருகின்றன. இதனையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.
இதற்கு பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என நம்பப்படுகிறது. தொடர்ந்து பேஜர்கள், வாக்கி டாக்கிகள் பல்வேறு இடங்களில் தகர்க்கப்பட்டது. இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா