மாபெரும் வெற்றி... ட்ரம்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

 
நெதன்யாகு

  அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாகக் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து ட்ரம்ப்புக்கும், குடியரசுக் கட்சிக்கு வாழ்த்துச் செய்திகள் குவிய தொடங்கியுள்ளது. அதன்படி  இந்திய பிரதமர் மோடி, “வரலாற்று வெற்றி பெற்ற இத்தினத்தில் நண்பருக்கு தனது வாழ்த்துகளை “தெரிவித்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வரிசையில்  அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நெதன்யாகு “அன்புள்ள டொனால்ட் மற்றும் மெலனியா டிரம்ப், வரலாற்றின் மிகப்பெரிய ரீ என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்.

ட்ரம்ப்

வெள்ளை மாளிகைக்கு உங்கள் வரலாற்றுத் திருப்பம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியையும் வழங்குகிறது. “இது மாபெரும் வெற்றி”  என பதிவிட்டுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web