தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா ?! பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்!

 
தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா ?! பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்!

தமிழகத்தின் ஆளுநராக 2017 முதல் பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பிரதமரைச் சந்திக்க் இருக்கிறார். பிரதமர் இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் கொரோனா தொற்று குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனமா ?! பீட்டர் அல்போன்ஸ் விளக்கம்!

அத்துடன், மேகதாது அணை விவகாரம், ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை விவகாரம் குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழக ஆளுநர் பன்வாரிலால், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்திப்பது ஆளுநர் மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அது உண்மையானால், புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் தமிழக முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்பே நியமனம் செய்யவேண்டும்; அதுதான் கூட்டாட்சி தத்துவம்” என தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவருடைய பொறுப்பில் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில், புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web