புறாக்கு உணவு வைப்பது ஒரு குத்தமா? அபராதம் விதித்த மாநகராட்சி நிர்வாகம்.. கொதித்தெழும் மக்கள்!
பெங்களூருவில் கப்பன் பார்க் மற்றும் ரேஸ்கோர்ஸ் சதுக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் புறாக்கள் கூட்டமாக சாலையோரம் காணப்படுகின்றன. வாகனங்களில் செல்பவர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, புறாக்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுப்பது வழக்கம். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு புறா இறகுகளால் மனிதர்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் என்று ஒரு தகவல் வெளியானது.
இதனால் புறாக்களுக்கு உணவளிக்க மாநகராட்சி தடை விதித்தது. ஆனால் புறாக்கள் கூட்டம் கூட்டமாக வரும் ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில் வாகன ஓட்டிகள் புறாக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த விஷயம் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.
அதன்படி, ரேஸ்கோர்ஸ் சதுக்கத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எழுதப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!