ஐப்பசி அன்னாபிஷேகம் இன்று நவ.14ம் தேதியா? அல்லது நவம்பர் 15ம் தேதியா?

 
இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

நாளை நவம்பர் 14ம் தேதி அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் ஒரு சில ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவதாக தகவல் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ஐப்பசி மாத அன்னாபிஷேகம் நவம்பர் 14ம் தேதியா அல்லது நவம்பர் 15ம் தேதியா என்று பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வருடத்தின் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எப்படி சித்திரை மாத பெளர்ணமியை சித்ரா பெளர்ணமி என்கிறோமோ அப்படி ஒவ்வொரு பெளர்ணமி தினத்தையும் கொண்டாடுகிறோம். எல்லா பௌர்ணமி நாட்களிலுமே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். அதனால் தான் பெளர்ணமியன்று சதுரகிரி, திருவண்ணாமலை என்று கிரிவலம் வருகிறோம். 

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

ஆனால் பாகுபாடில்லாமல் ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினத்தில் தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களிலுமே அன்னாபிஷேகம் நடைபெறும்.  ஐந்து வகையான உணவுகள், 16 வகையான பழங்கள், காய்கறிகள் என அன்னாபிஷேகம் சிவாலயங்களில் அமர்க்களப்படும். அபிஷேக பிரியரான சிவன் மனங்குளிர அன்னாபிஷேகம் விமரிசையாக செய்யப்படும்.

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பெளர்ணமி வருகின்றது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு பெளர்ணமி துவங்குகிறது.

இது போன்ற ஒரு ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் தான் சாபம் பெற்ற சந்திரனுக்கு சிவபெருமான் சாப நிவர்த்தி அளித்தார். ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி, ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு உரியது. அந்த வகையில் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அஸ்வினி நட்சத்திரத்தில் பெரும்பாலும் வரும் என்பதாலும், அஸ்வினி நட்சத்திரம் அன்னதானத்திற்கு உரிய சிறப்பான நட்சத்திரம் என்பதாலும் ஒரு சில கோவில்களில் அஸ்வினி நட்சத்திரம் வருகிறது என்பதால் நாளை அன்னாபிஷேகம் செய்யப்படும்.

அன்னாபிஷேகம்

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் இன்று நவம்பர் 14ம் தேதி வியாழக்கிழமை மாலை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று நவம்பர் 14ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகத்திற்காக அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பௌர்ணமி திதியில் தான் அன்னாபிஷேகம் நடைபெறும் என்பதால் பௌர்ணமி திதியை பின்பற்றும் ஆலயங்களில் நாளை நவம்பர் 15ம் தேதியன்று நாள் முழுவதும் இருக்கும் பௌர்ணமி திதியில் அன்னாபிஷேகம் செய்யப்படும்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web