சொந்த வீட்டை தீ வைத்து எரித்த ஐ.பி.எஸ் அதிகாரி.. மீட்க சென்ற போலீசுக்கும் தர்ம அடி.. அதிர்ச்சி பின்னணி!
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி வீட்டுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்ப தகராறு காரணமாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டிற்கு தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அருண் ரங்கராஜன் தன்னுடன் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அருண் ரங்கராஜன் கடந்த ஆண்டு கர்நாடகாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் பணியாற்றி வந்த அருண் ரங்கராஜனுக்கும், அங்கு பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் பழக்கம் குறித்து உதவி ஆய்வாளரின் கணவருக்கு தெரிய வந்ததும், இதுகுறித்து அருண் ரங்கராஜனின் மனைவிக்கு தகவல் தெரிவித்தார். பெண் போலீஸ் அதிகாரியுடனான தனது உறவை தனது மனைவியிடம் கூறிய போலீஸ் அதிகாரியை அருண் ரங்கராஜன் கடுமையாக தாக்கியதால், அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஐபிஎஸ் அருண் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அருண் ரங்கராஜன் மாற்றப்பட்டார்.
மேலும், இந்த விவகாரத்தால் அருண் ரங்கராஜனின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து பெண் காவல் உதவி ஆய்வாளரை ஈரோடு கோபிசெட்டிபாளையத்துக்கு அழைத்து வந்து அருண் ரங்கராஜன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம், அந்தப் பெண்ணைத் தாக்கியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அருண் ரங்கராஜன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பாக இந்த எஸ்ஐயுடன் ஏற்பட்ட தகராறில் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரங்கராஜ் தனது வீட்டிற்கு இன்று மதியம் தீ வைத்தார். வீட்டிற்கு தீ வைத்து உள்ளே இருந்த அருண் ரங்கராஜை போலீசார் மீட்டுள்ளனர்.அவரை மீட்க வந்த காவல் ஆய்வாளர் காமராஜை அருண் ரங்கராஜ் தாக்கினார். இதையடுத்து, அருண் ரங்கராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!