IPL 2021: Qualifier 2 – நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல்

 
IPL 2021: Qualifier 2 – நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஷார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற எலிமினேட்டர் தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின, முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 33 பந்தில் 5 பவுண்டரி உள்பட 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 18 பந்தில் 2 பவுண்டரி உள்பட 21 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

IPL 2021: Qualifier 2 – நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல்

இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஷுப்மான் கில் 18 பந்தில் 4 பவுண்டரி உள்பட 29 ரன்னும், சுனில் நரைன் 18 பந்தில் 3 சிக்ஸர் உள்பட 26 ரன்னும் எடுத்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் முகமத் சிராஜ், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சார்ஜாவில் வரும் 13-ந்தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி துபாயில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.

From around the web