IPL 2021: Qualifier 2 – பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

 
IPL 2021: Qualifier 2 – பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சார்ஜாவில் நேற்று 13-ந்தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின, இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

IPL 2021: Qualifier 2 – பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசில் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீசிய அஷ்வினின் 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழலில் அஷ்வின் வீசிய 5-வது பந்தை திரிபாதி சிக்ஸர் அடித்து 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

துபாயில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

From around the web