IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

 
IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெற்றது.

IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின, இதில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அட்டமிழந்தார் ஆனார், மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 32 பந்தில் 6 பவுண்டரி 3 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அட்டமிழந்தார். நிதிஷ் ரானா ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். ஷுப்மான் கில் 43 பந்தில் 6 பவுண்டரி உள்பட 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

IPL 2021 Finals : 4வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே!

அடுத்து அடுத்து விக்கெட் சரிந்தது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

From around the web