IPL 2021: Eliminator – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

IPL 2021: Eliminator – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

IPL 2021: Eliminator – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

இதுவரை நடைபெற்ற 56 லீக் போட்டிகளில் முதல் 4 இடங்கள் பெற்ற அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 3 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர். ரன் ரேட் அடிப்படையில் 4வது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

IPL 2021: Eliminator – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

ஷார்ஜாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் 2வது தகுதி சுற்றில் சார்ஜாவில் வரும் 13-ந்தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. இரண்டாவது தகுதி சுற்றில் வெற்றிபெறும் அணி துபாயில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.

From around the web