IPL 2021: 9-வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

 
IPL 2021: 9-வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதுவரை நடைபெற்ற 56 லீக் போட்டிகளில் முதல் 4 இடங்கள் பெற்ற அணிகள் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 3 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர். ரன் ரேட் அடிப்படையில் 4வது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

IPL 2021: 9-வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

துபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின, டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா 34 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 60 ரன்களும்,ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று 35 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 51 ரன்கள் சேர்த்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

IPL 2021: 9-வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

இதனை தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி டு ப்ளஸ்ஸிஸ் 1 ரன்னில் வெளியேற, பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்டினார். இந்த ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா 44 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த தாக்கூரும், ராயுடுவும் அடுத்தடுத்து வெளியேற போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. முதலில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் பின்னர் அதிரடி காட்டினார். தன் பங்குக்கு 50 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்த நிலையில் 19-ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த மூன்று பந்துகளையும் டோனி பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டாம் கர்ரன் 3 விக்கெட்டும், அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.

From around the web