பாம்பு விஷத்துடன் போதை பார்ட்டி ... அதிர வைக்கும் தகவல்கள்...!!

 
பாம்பு பார்ட்டி

பாம்புன்னா படையே நடுங்கும்னு சொல்வாங்க இளசுங்க என்னடான்னா... பாம்பு விஷத்த போதைக்காக பயன்படுத்த தொடங்கறதா அதிர்ச்சி தரும் தகவல்கள்  வெளியாகியிருக்கு.உத்தரப்பிரதேச மாநிலம்  நொய்டாவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில்   பாம்பு விஷம் கடத்தும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகளின் விஷமும் மீட்கப்பட்டன.  இச்சம்பவம்  குறித்து  தீவிர விசாரணை நடத்தப்பட்டதில்  யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடத்தல்காரர்கள் பிக் பாஸ் வெற்றியாளர் எல்விஷ் யாதவின் பெயரை கூறியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.   

பாம்பு பார்ட்டி


 மேலும் ​​கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பையில் மொத்தம் 9 பாம்புகள் இருந்தன. அதில் 5 நாகப்பாம்புகள், 1 மலைப்பாம்பு.   இதனுடன் பிளாஸ்டிக் பாட்டிலில் 25 மில்லி லிட்டர் பாம்பு விஷமும் இருந்தது.  கடத்தல்காரர்கள் மீது  வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாம்புகளுடன் பார்ட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டு நொய்டாவில் ரேவ் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். இந்த  யூடியூபர் பார்ட்டியில் தடை செய்யப்பட்ட பாம்புகள் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் பார்ட்டி இருந்ததாக கூறப்படுகிறது.

பாம்பு


10 கிராம் பாம்பு விஷத்தின் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகம்  என்பது கூடுதல் தகவல்.  இதனை சர்வதேச சந்தையில் பாம்பு விஷத்தை விற்றால் பல கோடி சம்பாதிக்கலாம் என்கின்றனர் கடத்தல் காரர்கள்.  இந்த மர்மகும்பல் எங்கிருந்து பாம்புகளை சப்ளை செய்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web