புயல் எச்சரிக்கையை பொறுத்து விமானங்கள் இயக்க நடவடிக்கை !
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது . இது நாளை பெங்கால் புயலாக உருமாறலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை மையம் விடுத்த புயல் எச்சரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் எனவும் நாளையும், நாளை மறுநாளும் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ளும்படியும் சென்னை விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலத்த காற்று வீசும் பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!