பலத்த காற்று.... சென்னையில் 18 விமானங்கள் ரத்து!

 
இண்டிகோ
 


 தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கால் புயல் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ


அதேபோல கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வா், புணே நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மங்களூரிலிருந்து இரவு 11.10-க்கு சென்னை வரும் விமானம் மற்றும் இரவு 11.30-க்கு திருச்சியிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஃபெங்கால் புயல், கனமழை காரணமாக சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் 18 விமானங்களும், இண்டிகோ விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இண்டிகோ ஏர்லைன்ஸ்

கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web