ஜெயம் ரவியைத் தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி... நடிகை ஊர்மிளா விவாகரத்து அறிவிப்பு!
திரையுலகில் இது விவாகரத்து சீசன் போல. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்று அடுத்தடுத்து விவாகரத்துக்கு மல்லுக்கட்டி நிற்கையில், நடிகர் ஜெயம் ரவியும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது ‘இந்தியன்’ பட நடிகை ஊர்மிளாவும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊர்மிளாவும், அவரது கணவரும் திருமணத்திற்கு முன்பு சில காலம் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஊர்மிளாவை விட மல்ஹோத்ரா 10 வயது இளையவர். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் இருந்தும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது பாலிவுட்டில் அப்போது பேசப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மும்பை நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஊர்மிளா இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஏன் விவாகரத்து கோரி மனு செய்தனர் என்பது தெரியவில்லை. திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. 2014ஆம் ஆண்டு பாலிவுட் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவின் உறவினரின் திருமணத்தில் இருவரும் முதல்முறையாக சந்தித்தனர்.
இருவரும் சந்திக்க மணீஷ் மல்கோத்ராவும் முக்கிய காரணமாக இருந்தார். அதனுடன், மொஹ்சின் மற்றும் மணீஷ் மல்கோத்ரா இணைந்து பணியாற்றுகின்றனர். 1990களில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஊர்மிளா, 2019 மக்களவைத் தேர்தலில் மும்பையில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!