செம மாஸ்... 147 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இந்தியா உலக சாதனை!

 
இந்தியா வங்க தேசம்

 இந்தியா - வங்கதேசம்   இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 27 முதல்  உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்  கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

கிரீன் பார்க் ஸ்டேடியம்

மொமினுல் ஹக் (40 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (6 ரன்) களத்தில் இருந்தார்கள். 2-வது நாளான நேற்று முன்தினம் முழுக்க முழுக்க மழை பெய்ததால் மைதானம் முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. ஒரு பந்து கூட வீசப்படாமல் 2ம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.  3வது நாளான நேற்று மழை பெய்யவில்லை என்றாலும்  முந்தைய நாள் பெய்த மழையால் மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.  விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை எனக் கூறி 3வது நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.  இதனையடுத்து 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில்  பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

கிரீன் பார்க் ஸ்டேடியம்

அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்துள்ளார். முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்துடன் களமிறங்கியது. முதல் 3 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களை கடந்ததன்  மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அதிவேகமாக 50 ரன்கள் அடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. தற்போது வரை இந்தியா 99 ரன்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து அதிரடியாக விளையாடி வருகிறது. இதில் ஜெய்ஸ்வால் 63 ரன்களுடனும், கில் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரோகித் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web