உலகின் முதல் நாடு இந்தியா!! 100 கோடியை சாதித்து கொண்டாட்டம்!

 
உலகின் முதல் நாடு இந்தியா!! 100 கோடியை சாதித்து கொண்டாட்டம்!


100 கோடி தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டிய உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலகின் முதல் நாடு இந்தியா!! 100 கோடியை சாதித்து கொண்டாட்டம்!

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது 75 சதவிகிதத்தினர் முதல் டோஸையும், 31 சதவிகிதத்தினர் 31 சதவிகிதத்தினர் இரண்டாம் டோஸையும் செலுத்தியுள்ளனர் .


இதனை கொண்டாடும் விதமாக டெல்லி செங்கோட்டையில் பிரம்மாண்ட தேசியக் கொடி ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா முழுவதும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கிகள் வாயிலாக இந்த வெற்றியை தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதே போல 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமங்களில் சுகாதார ஊழியர்களை கொண்டாடும் விதமாக போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு விநாடிக்கு 700 தடுப்பூசிகள் வீதம் செலுத்தப்பட்டு வருகின்றன. எனவே 100 கோடியின் கடைசி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர் யாரென்று கண்டறிவது கடினம் என தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

From around the web