அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிர்ச்சி... எச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் உயர்வு.... !
அமெரிக்காவில் வேலை என்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவாக அமைந்துள்ளது. அமெரிக்கா 2004 முதல் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டுவாசிகளுக்கு எச்-1பி வகை விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது. எச்1பி வகை விசா என்பது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால அனுமதி தான் எச்1பி விசா. அதாவது 3 ஆண்டுகள் அமெரிக்கா வாசத்திற்கு மட்டும் அனுமதி. குடியுரிமைக்கான அனுமதி அல்ல. எச்-1பி விசா வைத்திருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறும் கிரீன்கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
எல்-1 விசா ஒரு சர்வதேச நிறுவனத்தில் நிர்வாக அல்லது நிர்வாக மட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டாலும் இதே விசா செல்லுபடியாகும். இந்நிலையில், பிரபலமான H-1B, L-1 மற்றும் EB-5 போன்ற பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. அதன்படி, எச்1பி விசாக்களுக்கான கட்டணம் 780 டாலர் அதாவது இந்திய ரூபாயில் 64,731 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரூ.38,174 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.64,731 ஆக உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் எல்-1 விசாக்களுக்கான கட்டணம் 1,385 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,14,939 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 38,174 ரூபாயாக இருந்து வந்த நிலையில், ரூ.1,14,939 ஆக உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் EB-5 விசாக்களுக்கான கட்டணம் 11,160 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.9,26,153 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ரூ.3,04,983 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.9.26 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது அங்கு பணிபுரியும் வெளிநாட்டுவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால், அடுத்த 10 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 157 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,302 கோடி செலவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க