ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை .. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க..!

 
மதுரை மல்லிகைப்பூ

பண்டிகைக் காலங்களில் பூக்கள் விலை ஏறுவது வாடிக்கையாகிவிட்டது. பொங்கல் பண்டிகை காலத்தில், ஒரு கிலோ மல்லிகைப்பூ, 3,000 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், நாளை தை அமாவாசை என்பதால், இன்று மல்லிகையின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்றைய காலை விலை நிலவரப்படி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 2000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ 1000 ரூபாய்க்கும்,மெட்ராஸ் மல்லிகைப்பூ - ஆயிரம் ரூபாய்க்கும், சம்மங்கி, செவ்வந்தி - 150க்கும், பட்டன் ரோஜா - 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லிகைப்பூ சீசன் தொடங்கியது: ஒரே நாளில் 20 டன் பூக்கள் வரத்தால் விலை  சரிவு | Madurai jasmine season begins: 20 tonnes of flowers in a single  day, prices fall - hindutamil.in

நேற்று ரூ.1000க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இன்று இரண்டு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000 ஆக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும், முல்லைப்பூ கிலோ ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையில் ஒரு கிலோ மல்லிப் பூ ₹3000-க்கு விற்பனை..! பொதுமக்கள் அதிர்ச்சி..!  - Namadhu TV

நாளை தை அமாவாசை மற்றும் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ள நிலையில், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web