இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில் வெடித்த வன்முறை... 6 போலீசார் பலி... 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் . இவர் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உட்பட 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. எனினும் மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் இருக்கவேண்டிய சூழலில் உள்ளார். இந்நிலையில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு விட்டன. பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இதனை பொருட்படுத்தாமல் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது.
இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 4000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!