டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு... புதிய OMR ஷீட் விடைத்தாள்... இணையதளத்தில் பார்க்கலாம்!? முழு விபரம்

 
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மாதிரி படத்தை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளில் ஒருசில புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளின் மாதிரி படம், தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

வினாத்தாள் தொகுப்பு எண் வட்டங்களை கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்புவது தொடர்பாகவும், கண்காணிப்பாளர் கையொப்பம் பகுதி மாற்றம் தொடர்பாகவும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் புதிய ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியை இணையதளத்தில் பார்த்து அறிந்து, தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web