திடீர் பரபரப்பு... ஜெயக்குமார் வழக்கில் முக்கிய தடயம்... கிணற்றில் இருந்து கத்தி மீட்பு!

 
ஜெயக்குமார்
 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் முக்கிய தடயமாக அவரது வீட்டின் பின்புறம் உள்ள  கிணற்றிலிருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ம் தேதி காலையில் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, தீயில் எரிந்து உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

ஜெயக்குமார்

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் இதுகுறித்து வழககு பதிவு செய்த நெல்லை மாவட்ட போலீஸார்,  10 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் எம் எல் ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் இறந்து கிடந்த தோட்டத்தில் வேறு ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பதை நான்காம்  தேதியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.  5-வது நாளாக இன்றும் சோதனைத் தொடர்ந்தது. ஜெயக்குமாரின் உடல் கண்டறியப்பட்ட  தோட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள  அனைத்துப் பொருட்களையும்  சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவரது இரண்டு செல்போன்கள் குறித்து எந்த தகவல்களும் கிடைக்காததால் அவற்றை தேடுவதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

கேபிகே ஜெயக்குமார்

தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில்  4 ராட்சத மோட்டார்கள் மூலம் கிணற்றுத் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 17 மணி நேரமாக அந்த பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த கிணற்றில்  இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கத்தியை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் ஏதேனும் தடயங்கள் கிடைக்கலாம் என்ற நோக்கில் தொடர்ந்து அந்த கிணற்றில் தூர்வாறும் ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் உதவியுடன் தடயவியல்  துறையினர் ஆய்வு செய்து  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web