ரயில்வே விதிமுறைகளில் முக்கிய மாற்றம்... இனி லோயர் பெர்த் கிடைப்பது ஈஸி!

 
ரயில் கர்ப்பிணி லோயர் பெர்த் தாய்

தினமும் லட்சக்கணக்கானோர் ரெயிலில் பயணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் என்பதாக இருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். இனி அப்படிப்பட்ட நிலை இல்லை. இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

ரெயிலின் கீழ் பெர்த் சில வகை மக்களுக்கு இனி ஒதுக்கப்படும். ரயிலின் கீழ் இருக்கை யாருக்கு கிடைக்கும் என்பது தெரியுமா? மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது  அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ரயில் முதியோர் பென்ஷன்

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 கீழ் 2 இருக்கைகள், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி 3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம். அதே போல கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

ரயில்வே மூத்த குடிமக்களுக்கு, அதாவது 60 வயது நிரம்பிய பெரியவர்களுக்கு கேட்காமலேயே இனி லோயர் பெர்த்தை கிடைக்கும். ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4 முதல் 5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3 முதல் 4 லோயர் பெர்த்கள் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன.  அவர்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கையைப் பெறுகிறார்கள்.

ரயில்

ஒரு மூத்த குடிமகன்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நான்கு நாட்களுக்கு முன்பே அதாவது 1ம் தேதி ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web