’கமலா ஹாரிஸை விட நான் தான் அழகு’.. என்னை ஜெயிக்க வையுங்கள்.. சர்ச்சையை கிளப்பிய டொனால்ட் டிரம்ப்!

 
 கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதேபோல், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் அதிபர் ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயது உள்ளிட்ட காரணங்களால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

ஜோ பைடன்

இதனால் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார். இதையடுத்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (59) ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதன் காரணமாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசினார்.

கமலா ஹாரிஸ் - டிரம்ப்

"ஜோ பைடனை விட கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். கமலா ஹாரிஸ் பல முக்கியமான அரசியல் பகுதிகளில் தீவிர இடதுசாரிகளாக நடந்து கொள்கிறார். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டீர்களா, அது ஒரு முட்டாளுடைய சிரிப்பைப் போன்றது. நான் அவரை விட அழகாக இருக்கிறேன். அதனால் என்னை ஜெயிக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web