ஆசிரியர் வேலைக்கு நான் கேரண்டி.. புது உருட்டு உருட்டி ரூ.36 கோடி அபேஸ்.. மோசடி மன்னன் அதிரடி கைது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் பாலகுமரேசன். ஆதவா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனம் என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகளை திறந்துள்ளார். பின்னர், இந்த தொண்டு நிறுவனம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்க ஆசிரியர் பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து, அதன் மூலம், நேர்காணல் நடத்தி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். அதன் மூலம் சிலரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
மேலும், இப்பணிக்கு வந்த பட்டதாரி ஆசிரியர்களிடம், "தேர்வு இல்லாமல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. 58 வயது வரை அந்தப் பள்ளியில் பணிபுரியலாம்" எனக்கூறி ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டார். இதை டெபாசிட் செய்தவுடன். ஐந்து லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ், வேலையில் இருந்து விடுபட்டவுடன் முதிர்வு தொகை வழங்கப்படும்.மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி ஏமாற்றி, சுமார் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1351 பட்டதாரி ஆசிரியர்களிடம் இருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா போன்ற காலங்களில் மாவட்ட கல்வித்துறை மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆசிரியர்கள் சுமார் 4 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அங்கு பணிபுரிந்துள்ளனர். இதையடுத்து ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, பாலகுமரேசன் ஏமாற்றியதை அறிந்த, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் அளித்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று பாலகுமாரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை ஆதரவுடன் பட்டதாரி ஆசிரியர்களிடம் 36 கோடியே 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த பாலகுமரேசன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின், இந்த முறைகேட்டில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!