தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க... சுகாதாரதுறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே பருவமழை சம்பந்தமான நோய்களும் பரவத் தொடங்குவது வழக்கமான ஒன்று தான். அதிலும் குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல், செரிமானப் பிரச்சனைகள் தலைதுக்கும். அந்த வகையில் நடப்பாண்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் வார்டுகள் காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாக பொது சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
வைரஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, அதீத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காய்ச்சலின் தன்மை அளவை பொறுத்து இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொண்டை வலியுடன் காய்ச்சல் , குழந்தைகள் முதியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருப்பின் அவர்கள் உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையாத நிலையில் உடனடியாக மருத்துவர்களை அணுகலாம். அத்துடன் அடிக்கடி கைகளை கழுவுதல், கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை குடித்தல், சூடான உணவை சாப்பிடுதல், வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுதல், கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்தல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!