கையில் பணம் இல்லை என்றால் ஜி-பே பண்ணுங்க.. வழிமறித்து தொல்லை கொடுக்கும் திருநங்கைகள்!
திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் மலை இறக்கத்தில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தரிசனம் செய்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்களை வற்புறுத்தி பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
"பணம் இல்லை" என தெரிவிக்கும் பக்தர்களிடம் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணம் அனுப்பக் கூறி அலைக்கழிப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவில் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பணம் பறிக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!