நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நேற்று இரவு திடீர் உடலநலக் குறைவு காரணமாகவும், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாலும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என பதிவிட்டு, வாழ்த்தியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) October 1, 2024
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துள்ள நிலையில், தற்போது பட வெளியீடு மற்றும் ‘கூலி’ படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் திடீர் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு 10.30 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதயம் சம்பந்தமான சிகிச்சைக்கு ஏற்கெனவே மருத்துவ பரிசோதனைக்கு திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கேத் லேப் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக உள்ளதா என்றும் இன்று காலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!