’’அனைத்து விமர்சனங்களுக்கும் சரியான பதிலடி கொடுப்பேன்’’.. உதயநிதி ஸ்டாலின் சூளுரை!
தமிழக அமைச்சரவை நேற்று இரவு மாற்றியமைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை முதல்வர் பதவி அல்ல, பொறுப்பு... மகத்தான பொறுப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இளைஞரணி தலைவராக நான் நியமிக்கப்பட்டபோதும் என்னை விமர்சித்தார்கள். துணை முதல்வர் என்ற முறையில் விமர்சனங்களையும், வாழ்த்துகளையும் ஏற்பேன். அனைத்து விமர்சனங்களையும் வரவேற்கின்றேன். அனைத்து விமர்சனங்களுக்கும் எனது பணியின் மூலம் பதிலடி கொடுப்பேன் என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!