விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கனிந்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை என்று தமிழக முதல்வர் கூறி, ஒரு மாதத்திற்குள் பழுத்ததால், நேற்று அதிகாரப்பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுவதாக தகவல்கள் வெளியான நிலையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னை விமர்சிப்பவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன். எனக்கு வாழ்த்து கூறுபவர்களுக்கு நன்றி. என்னை விமர்சித்தவர்களுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன்" என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!