அதிர்ச்சி... தெருநாய் கடித்துக் குதறியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் பெனுகாஞ்சிப்ரோலுவில் மாடல் காலனி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கோபால் ராவ் என்பவரின் 14 மாத ஆண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் கடித்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தெருநாய்களை விரட்டி குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வெறிநாய்கள் கடித்ததால் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குழந்தை இறந்ததைக்கு நியாயம் கேட்டு பெனுகஞ்சிப்ரோலு பகுதி மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
இறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்த குழந்தையின் தந்தை கோபால் ராவ் கூறியதாவது: கிராமத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே விட பயப்படுகிறார்கள். இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!