கல்யாணமே செய்துக்கலை... கல்லூரி விரிவுரையாளர்... இலங்கையின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்து ஓர் பார்வை!

 
ஹரிணி அமரசூரிய

இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். படுபாதாளத்திற்கு சரிந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மெல்ல திரும்ப முயற்சித்து வருகிறது இலங்கை. இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதனையடுத்து நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நாட்டின் 9வது ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய ஜனாதிபதி திசநாயக்கவினரால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தருணத்தில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.


நேற்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ஹரிணி, இலங்கயின் 3வது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கவும், முதல் பெண் பிரதமரான சந்திரிகா பண்டாரநாயக்காவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி பிறந்தார். இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாத ஹரிணி அமரசூரிய 2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானப் பிரிவில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு, இலங்கையின் கல்வி முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, இது தொடர்பாக குரல் கொடுத்து அரசியலுக்கு வந்துள்ளார்.

அனுர குமார திசாநாயக்க

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி பாலின சமத்துவம் மற்றும் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அதன் கண்டுபிடிப்புகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் இலங்கையின் 3வது பிரதமராக அமரசூரிய பதவியேற்றுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web